கீற்றில் தேட...

எப்படி செல்ல வேண்டும்
எனத் தெரியாமல்
இது பெருந்தவிப்பு
சரியான பதில்கள்
கிடைக்காத போது
எங்கிருக்கிறோம் என்பதும்
மறந்து போகிறது
இருந்தும் முன்பு கண்ட
வழிகளின் கோர்வை
மனதில் ஒரு வரைபடம்
நிகழ்த்த
திசைகளின் நுட்பத்தில்
புது நகர்வு
யாரிடமும் கேட்கத் தயக்கம்
நகர்ந்து நகர்ந்து
நெஞ்சம் படபடக்க
போய் நின்ற இடம்
பேருந்து நிறுத்தமா
தெரியவில்லை
புது ஊரில் பழைய ஆளாய்
மாறுவது சுலபமல்ல
மாற்ற வேண்டிய பேருந்து
வந்து கொண்டிருக்கிறது....!

- கவிஜி