கடற்காற்றின் கால்களையும்
கடலலையின் கைகளையும்
கடன் வாங்கிக் கொண்டு
கடுகடுக்க தேடிக் கொண்டிருக்கும்
அவனுக்கு
கிடைக்கப் போவதில்லை அவள்
தான் தொலைத்தது
நிச்சயம் எனத் தெரிந்தும்
ஏதோ ஒன்றின் உந்துதலில்
ஏதோ ஒன்றினை ஊன்றியபடி
தேய்ந்த நிலவின் சாயலாய்
தேம்பி நிற்கிறான் அவன்
யாரும் தேற்றிப் பார்க்க வேண்டாம்
தோற்றுப் போவீர்கள்
அதற்குத்தானே இருக்கிறான் கடலில்
அதற்குத்தானே இருக்கிறது கடலும்..
- ஷினோலா