யுகங்களின் ரகசியங்களை
தற்காலிகமாகப் பாதுகாக்க
பசுமையை தன்னில்
போர்த்திக்கொண்டிருந்தது
பாழடைந்த
ஒரு கிராமத்துக்குளம்
குளக்கரை மரங்களிலிருந்து
உதிர்ந்த சருகுகள்
ரகசியங்களைத்தேடி
கரைகளில் ஒதுங்கும்
சில குளத்தில் மூழ்கி
ஆழ் மனற்சிறையில்
மாய்ந்தும் போகும்
தாழ்வாய்த் தரையிறங்கும்
பாவனையில் ஓரிரு பறவைகள்
நகக்கீறலில்
குளத்தினை ஆழ்ந்தெடுத்து
குழம்பித்தவிக்கும்
இருப்பின் துளி படர்த்தி
யாருமறியா
ஒரு பின் இரவுக் காலத்தில்
குளத்தின் பிடிவாதம்
சற்றே தளர
யுகங்களின் ரகசியங்களை
தன் முத்தத்தால்
காண்பதும் கலைப்பதுமாக
முதல் மழைத்துளிகள்
- பிரேம பிரபா (