
விதையாய் தரை புகுந்து
தளிராய் தலை நிமிர்ந்து
கோடையில் கருகாமல்
வாடையில் மருகாமல்
கதிர் பிடித்து
அறுவடையில் உதிராமல்
களம் புகுந்து
போரடிக்கையில் சிதறாமல்
வியாபாரத்தளம் கண்டு
உன் வீடு அடைக்கலம் கொண்டு
சோறாகி இலைக்கு வந்து
பிறவிப் பயன் அடைய இருக்கையில்
மிச்சமாகி
குப்பைக்குப் போனது
அந்த அரிசி
- துரை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )