
உனக்கும் எனக்குமான
இந்த நீண்ட பயணத்தில்
நெருங்கியே நடக்கின்றன
நமக்கான பிரிவுகள்.
நான் வசிக்கும்
பருவத்தில் என்னைப் பார்த்து
பசுமையாய் சிரிக்கின்றன
இலையுதிர் காலங்கள்.
ஆண்டுகள் தோறும்
அடைகாத்து வரும்
நீர்நிலையின் நிசப்தத்தை
கலைத்துப் போகும்
கல்லை போலதான்
உன் புன்னகையும்
என்னைக் குலைத்து
போகின்றன.
வடுக்களில் வழியும் இரத்தத்தில்
நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்!
புதியதாய் ஏற்படும் எந்த காயமும்
உன்னைத் தேடுகையில்
நீ தந்ததைப்போல்
பெரிதாய் வலிப்பதில்லை.
நீ கேட்பதை மறுப்பதும்
நீ மறுத்ததைக் கேட்பதும்
என்னால் இயலாத ஒன்று.
நாம் ஒன்றாகப் பயணித்த
அந்த பேருந்துப் பயணத்தை
நினைவுபடுத்துகின்றன.
எனது எல்லாப் பயணங்களும்.
இறுதிவரை புரிவதேயில்லை.
நீ இருப்பதற்கான
காரணமும்
உன்னை இழப்பதற்கான
காரணமும்