
கருக்குவளையில் இருந்து
வீசப்பட்ட சிசுவாய்
எனது கனவுகள் ஆடைகள்
ஏதுமின்றி அம்மணமாய்!
ஒவ்வொரு முறை
துகில் தரிக்க முற்படுகையிலும்
துச்சாதன்களின் கரங்களாய்
உரித்தெடுக்கின்றன சமூகத்தின்
சாக்கடை மிருகங்கள்.
ஊடகங்களின் வழியே
உற்றுநோக்கும் விழிகளில்
இருந்து தப்பிக்க கரங்களை
வைத்து நிர்வாணத்தை மறைக்கிறேன்.
கைகளை விலக்கி விட்டு
விரசத்தோடு பார்க்கின்றன்
ஜாதி புழுக்கள்.
பாலினம் கண்டறிய பச்சையாய்
என் உறுப்புகளை பார்வையால்
உருக்குலைக்கின்றன மனிதம்
மரணித்த மாக்களின்
காமக் கண்கள்.
நிர்வாணம் மட்டுமே நிரந்தரமாய்
நிர்பந்திக்கப் படுகையில்
எந்த உடையை அணிவிப்பேன்
என் கனவுகளுக்கு?
- உதயகுமார்.கோ (nesan_இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )