எனக்கு நிலவைப் பிடிக்கும்.
அவளுக்கு நட்சத்திரங்களை...

அவள் கணக்கில் புலி...
நான் வண்ணத்துப்பூச்சிகளோடு
பேசிக்கொண்டிருப்பேன்.
அவள் கேபிள் டிவியில் மூழ்கி இருப்பாள்...
நான் பனிமழை பொழிகிறதென்று
வேடிக்கை பார்க்க அழைப்பேன்.
அவள் வீடு நனையாமலிருக்க
கதவை சாத்துவாள்...
நான் மெதுவாய் மலர்த்த நினைப்பேன்.
எல்லாவற்றிலும் அவசரம்தான் அவளுக்கு...
இத்தனைக்கும் நான் தான் உயிரென்று
நூறு தடவை தாலியை தடவிக்கொள்வாள்...
- சரவணன்.பெ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )