
தெரியவில்லை
கடனைத் திருப்பாததால்
ஒன்றிரண்டு நட்பும் போயிற்று
அடிபட்டுப் படுக்கையிலிருக்கும் நெருங்கியவர்களைப்
போய்ப்பார்க்க வக்கில்லை
பரிசுதர இயலாதென்பதால்
திருமணங்கள் தவிர்க்கப்பட்டன
சொந்தமென்று யாரும் வந்தால்
அக்கம்பக்கம் அலைச்சல்
சம்பளம் பிந்தினால்
அழுகினதாய்த் தேடுகிறான்
கடைக்காரன்
வெளுத்துப்போன புடவையில்
மனைவி
ஊக்கில் ஒட்டிக்கொண்டிருக்கும்
செருப்பு
மின்கட்டணம் அஞ்சி
விசிறியில் கழியும் கோடை
இவை எவற்றையும் சட்டைசெய்யாமல்
நம்பிப்
பிறந்திருக்கிறாள் மகள்
- பச்சியப்பன்