கீற்றில் தேட...


Rainஇன்று
வெய்யில் அதிகம் தான்

அதன் பலனோ என்னவோ
மழை

மழையின் சுவடுகளை
தாங்கியிருந்த செடியின் இலைகள்

எங்கும் ஈரப்பதம்

இருப்பினும்

இரவு வந்துவிட்டது
நிலவும் தான்

கசியும் நிலவொளியில்
எல்லாம் அழகு தான்

சிறு
சிறு நீர் தேக்கங்களில்
சிதறிக்கிடக்கிறது நிலவு

நிசப்தங்களில்
முன்னுரிமைபெற்ற இரவுபூச்சிகள்
ஏதோ பேசிக்கொள்கிறது

இந்த மௌனத்தை கலைக்கிறது
இலைகள் தாங்கிவிட்ட
மழையின் சடலங்கள்

மழைகலந்த காற்று
என்னுள் சில்லிப்பூட்ட

கவிதை ஏக்கமாய்
புன்னகைக்கிறேன்.


அறிவுநிதி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.