
ஆவலோடு காத்திருக்கிறேன்.
உலகக் கோப்பை போட்டிகள் குறித்தும்,
யார் வெல்வார்கள் என்பது குறித்தும்
யோசித்துக் கொண்டேயிருக்கிறேன்.
அந்த இசையமைப்பாளரின்
அப்படம் எப்போது வெளிவரும்?
அந்த நடிகரின் இப்படம்
வெற்றியடைய வேண்டுமே!
யாராவது, ஏதாவது,
நற்செய்தி கொண்டு வருவார்களா?
என் படைப்பு, ஏதேனும் ஒன்றாகிலும்
பிரசுரமாகிவிடுமா?
கடவுளே நீர் தான் செவிசாய்க்க வேண்டும்.
பிரிவுகள், தோல்விகள், வலிகள்,
அவமானங்கள், அலைக்கழிப்புகள்,
மரணங்களின் நடுவே வாழும்
நான்,
அடுத்த மாதம் வரும்
திருவிழாவிற்கு மிக்க
ஆவலுடன் காத்திருக்கிறேன்,
ஒரு குழந்தையைப் போல-
அதற்குள், எந்த துயரச் செய்தியும்
வந்துவிடக் கூடாது என பயந்தபடியே.
- ம.ஜோசப்