
சொன்னதும்...
நீங்க கிறிஸ்துவரா
என்று கேட்பவர்கள்
நிறைய பேர்.
கம்யூனிஸ்ட்
கட்சிக்காரரா?
சலிப்போடு கேட்கிறார்கள்
இன்னும் சிலர்.
பொங்கல் கொண்டாடுறீர்களே
நீங்களும் இந்துவா?
இப்படியும் சில பேர்.
என்னை அடையாளம் காண
நினைப்பவர்களிடமிருந்து
அவரவரையும்
அடையாளம் காண்கிறேன்
நான்.
- கோவி. லெனின்