
அதே நேரத்தைக் காட்டினாலும்
உன்னுடையது ஏழாயிரத்து எழுநூறு.
காரில் போவதற்கு மூவாயிரத்துக்கு நீயும்
காலில் போடுவதற்கு அறுபது ருபாய்க்கு நானும்
காலாணிகள் வாங்குகிறோம்.
எனக்கான கடைகளில் நீ நுழைவதில்லை.
உன் கிரெடிட்கார்டு நுழையும் கடைகளில்
நான் நுழைய முடிவதில்லை.
இருந்தும் கூட குஷன் மெத்தையிலிருந்து
அடிக்கடி குதித்து கோரைப்பாயில் உறங்கும் என்னை
தட்டியெழுப்பிச் சொல்கிறாய்
தூக்கம் வரவில்லை என்று.
- ஜெயபாஸ்கரன் (jayabaskaran_