எல்லோருக்கும் புரியவைக்கலாம்
ஏங்கினேன் என எழுதியே
ஏங்கவைக்கலாம்
கடும் விமர்சனம்
கண்டிப்பாய் விழாது
கருத்தை கவரவில்லை
என்றாலும்
கடுஞ்சொல் வராது
காவியங்களோ
கருத்தோவியங்களோ
தேவையில்லை
கருகிய காதல்
கவிதைகள் போதும்
கவிஞர் என முகவரியிட
காதலைவிட இங்கு
காதல் கவிதைகள் மட்டுமே
உண்மையான உயிர்ப்புடன்
காதல் . . !
இறந்தகாலத்தில் இருந்திருக்குமோ
இப்போ இருக்கிறதோ
இனிமேலும் இருக்குமோ
இல்லை
இருக்கவே இருக்காதோ. . . ஆனால்
காதல் கவிதைகள்
கட்டாயம் இருக்கும்
கால காலத்திற்கும்.
இருப்பதாக நம்பப்படுவதால். . . இறைவன்
காதல்
இருப்பதாக நம்பப்படுவதால். . . கவிதைகள்.
- பத்மப்ரியா (padmapriya_