
கரையுது காலம்
காத்திருக்கிறாய் எதற்காக
காதல், பாசம்,
நட்பு, பரிவு
அன்பு, ஆதரவு எல்லாம்
நேற்றைய பிணங்களாய்!
அம்மா, அப்பா
மனைவி, மகன்
மாய சொற்களாய்
முன்னிற்கும் உறவுகள்!
முயன்று தேடி
முன்னால் அன்பென்றிருக்கும்
மாய வலையில்
மாட்டவில்லையானால் அவன்
மாயங்கள் அறிவாய்!
அன்பென்றால் அவனொருவனே
அறிவாயெனில் அவனை
அறிந்திட வருவாய்!
அறிந்திட ஆயத்தமென்றால்
அவன் கதவு தட்டும்
முதல் ஒலியாய்
காத்திரு ஒரு
மரணத்திற்காய்!
- பாஷா (