
இதய அரங்கத்தினுள்
நடன அரங்கேற்றம் செய்யும்
என்
இனிய புகை மாதேவியே
உன் தொடர்ந்த
நடனத்திற்கு
என்
இருமல்கள்தானா
‘ஜதி’ சொல்லக் கிடைத்தன ? !
உறவு
ஏ ! நிலவுப்பெண்ணே
உன்னை
சூரியனோடு சேர்ந்நிருந்து
பார்த்ததே இல்லையே..
பிறகு
எப்படி உனக்கு
இத்தனை
நட்சத்திரக் குழந்தைகள் ? !
- பொன்னாப்பூர் மா.அர்ச்சுனன், சிங்கப்பூர் (