
நீதான் உயிர் மூச்சுயென எனை தினமும் பாடி நீ நின்றாய்
ஆதாம் ஏவாள் போல நாமென்று, பகலும் கூடி நீ கலந்தாய்
மாதம் மூன்று ஆனவுடன் எனை தழுவி பிரிந்து நீ சென்றாய்
நீயாய் ஏற்றிய தீபம் நெடுநாள் அணைய மறுக்கிறது.
பேயாய் இந்த சதை உடம்பும் தாளம் போட்டு குதிக்கிறது.
நாயாய் உன் திரு உடம்பும் அங்கே தினமும் ஓடி உழைக்கிறது.
ஆறாய் அனுப்பிய பணம் யாவும் உன் உதிரம் தின்று அழிக்கிறது
அடுத்த தலைமுறை வாழ்க்கைக்கு நம் தலைமுறை அழிக்கின்றோம்.
நடந்து முடிந்த தினங்களையே தினமும் தின்று வாழ்கின்றோம்
கடந்து வந்த பாதையினை திரும்பி பார்த்து மகிழ்கின்றோம்
கடவுள் தந்த திருநாள்கள் தினமும் தோன்றி மறைகிறது..
எதையோ நினைத்து நம் வாழ்க்கை இப்படியாய் போகிறது..
கதையோ என்று பலர் நினைக்க தினமும் போனில் அழுகின்றோம்.....
ponnu_இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
ponnu_இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.