பசி மறந்த பாரதம் வேண்டும்
புதுமைமிகு செயல் மிகுந்து
புதுப் பொலிவுடனே மாறவேண்டும்
விவசாயம் பெருக வேண்டும்
பிற உற்பத்தி வளர வேண்டும்
பிறன் கையை எதிர் நோக்கா
தன்னிறைவு அடைய வேண்டும்
நதிநீர்கள் இணைய வேண்டும்
நீர்நிலைகள் நிரம்ப வேண்டும்
வறட்சி நிவாரனம் என்ற
வார்த்தையை மறக்க வேண்டும்
விஞ்ஞானம் வளர வேண்டும்
மெய்ஞ்ஞானம் உணர வேண்டும்
கலாச்சாரம் அழிக்காத
கலைஞானம் வளர வேண்டும்
அறியாமை விலக வேண்டும்
அடிமைத்தனம் அழிய வேண்டும்
தீண்டாமை ஒழிந்திடவே
மனிதம் தழைக்க வேண்டும்
தனிமனித ஒழுக்கம் வேண்டும்
தன்னலமற்ற தன்மை வேண்டும்
செய்யும் தொழிலே தெய்வம் என்ற
சிந்தனை வளர வேண்டும்
நேர்மையான அரசியல் வேண்டும்
உண்மையான அரசு வேண்டும்
நாட்டு நலன் வேண்டி
தேசப்பற்று வளர்க்க வேண்டும்
ஒருங்கிணைந்த இந்தியா என்ற
ஒருமைப்பாடு ஓங்க வேண்டும்
மதம் மறந்த இந்தியா என்ற
மறுமலர்ச்சி பிறக்க வேண்டும்
- சுரேஷ் (