மலைமேலே மழைமேகம் -
மலைமகளொடு மலைவளமொடு
மளமளவென இழைமேகம்!
இழைமேகம் இழைமேகம்
இலைமேலே இழைமேகம் -
இலைதழையொடு எழில்பொழிலொடு
இளையவளெனக் குழைமேகம்!
குழைமேகம் குழைமேகம்
குலைவாழைக்(கு) உழைமேகம் -
குழையணிதமிழ் மடவார்குழல்
குலமெனக்கவி விழைமேகம்!
விழைமேகம் விழைமேகம்
விளைவதுதர விழைமேகம் -
விசும்பின்துளி பசும்புல்தரை
விளம்பும்குறள் அழைமேகம்!
அழைமேகம் அழைமேகம்
அலைந்தலைந்தே அளைமேகம் -
அலையலையென அழகழகென
அருளருளெனத் தழைமேகம்!
தழைமேகம் தழைமேகம்
தகைபுகழொடு தழைமேகம் -
தளைதொடையொடு நடமிடுகவித்
தமிழ்மேகம்.. அம்மம்மா!
- தொ.சூசைமிக்கேல் (