
தன் முகம்
இழந்து விடுவேனோ
பயம் தான் விரட்டுகிறது
தன் முகம் தேடி
அவ்வப்போது அலைச்சல்
வைத்த இடத்தில்
கண்ட பழைய முகத்தில்
வைரத்தின் ஜொலிப்பு
கொஞ்சம் குறைந்ததாய்
அடிக்கடி ஒரு குடைச்சல்
சொந்த முகத்திற்கு
பட்டை தீட்ட
சில பழைய முகங்களும்
பல பக்க முகங்களும்
தேவைதான்
சொந்த முகம்
பட்டை தீட்டிய பின்னும்
நம் முகமாய் இருக்குமென்றால்.
- நண்பன் (