
கச்சித அளவில் இவளைப் படைத்தாய்னு
ஒரு நாலு தலை மிருகத்தை வியக்கவோ,
பூமியின் துணைக்கோள்
ஆணா, பெண்ணா என்று
உறுப்பு தேடி வான் பார்க்கவோ,
மசுறு, கோவேறு கழுதை,
இத்தனையாவது ஷேக்ஸ்பியர்,
அத்தனையாவது மார்க்ஸ்னு
பேரை மாத்திக்கவோ,
“போன மாசம் இந்த பத்திரிகையில
வந்த உங்க கவிதை சரியா புரியலையே,
கடினமாயிருக்கே”
என்றான வாசகர் கடிதத்தை குறிவைத்தோ
காகிதம் தின்று
உங்கள் பேனாக்கள் விட்ட
புளித்த ஏப்பங்களை
ஓரிடத்தில் குவியுங்கள்.
தேவையிருக்கிறது !
எங்கள் கழுதைகளுக்கு உணவும்
எங்களுக்கான கவிதைகளில் உயிரும்!
- பாஸ்கர் (