
தாம்பத்யத்தில்
தர்ணா நடத்துகிறாள்.
வளைய வளைய வந்தாலும்
வளையல் இல்லாவிடில்
முழுமை பெறாது
அழகென்பதை
ஒப்புக்கொள்கிறேன்
கண்ணாடி வளையலுக்குக்
கிடைக்கின்ற மவுசு
எப்போதும் வாய்ப்பதில்லை
முன் ஜென்மத்தில்
சாபம் பெற்ற
பிளாஸ்டிக் வளையல்களுக்கு
வளைகாப்பு நடத்தப்படாது
குழந்தை ஈன்றவளின்
மனக்குறை
மண்ணுக்குப் போகும்வரை
மறைந்ததாய் பேச்சில்லை
ஒரு கட்டியணைப்பின்போது
வளையல்கள் சிதறி
இரத்தம் கசிந்ததை
சந்திக்கும்போதெல்லாம்
மறக்காமல் சொல்வாள்
மறந்து சென்ற காயத்ரி
அனைவருக்கும் பிடித்த
அன்பான வளையல்கள்
அசிங்கப்பட்டுப் போவது
கணவனை இழந்தவளின்
கைகளிலிருந்து
உடைக்கப்படும்போதுதான்
- மாறன்