நாம் செய்ய வேண்டிய
சில கடமைகள் உள்ளன
ஷெல்லடிகளின் சத்தம்
செவிகளில் விழாமலிருக்க
தொலைக்காட்சிப் பாடலின்
ஒலியளவை அதிகரிக்கலாம்
செய்தித்தாள்களில் வரும்
சினிமா பக்கங்களைத் தவிர
எஞ்சியவற்றைக் கிழித்து விடலாம்
சில அறிக்கைகள் விடலாம்
சில கணக்குகளைப் போடலாம்
சில எதிரிகளைத் திட்டலாம்
சில துரோகிகளை சபிக்கலாம்
ஆத்திரப்படலாம்
எரித்துக் கொள்ளலாம்
அடித்துக் கொள்ளலாம்
விதியெனலாம்
மதிகெட்டவர்களெனலாம்
தப்பி பிழைத்தவர்களின்
கண்ணீரைக் கேட்டுவைக்கலாம்
பிறகொரு நாளில்
நிதானமாக
நாலுவரி கவிதையெழுதலாம்
- என்.விநாயக முருகன் (