சாதி அமைப்பு இந்திய சமூகத்தின் தனித்துவமான அடிப்படையான அம்சம். நூற்றாண்டுகளாக சாதிக்கு எதிரான இயக்கங்கள் செயல்பட்டும்; புத்தர் காலத்தில் தொடங்கி, குறிப்பிட்ட தேவைக்கு ஏற்ப பல பகுதிகளில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் தோன்றி சாதி ஒழிப்புக்கு முக்கிய பங்காற்றின; சாதி ஆதிக்கம் மதங்கள் மூலமாக பல மோசமான வடிவங்களில் இந்த நாட்டில் உள்ள சமூகங்கள் முழுவதும் பரவியது. இந்திய சமூக அமைப்பில் சாதியம், ஆணாதிக்கம், தனிநபர் சொத்துரிமை இவை அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையது; சர்வதேச நிதி மூலதன மேலாதிக்கம் பெருகிவரும் இன்றைய சூழலில், சாதி மேலும் கொடூரமான வடிவங்களை எடுக்கிறது. உலகமயம்-தாராளமயம்-தனியார்மயம் கொள்கைகளை நடைமுறைப்படுத்திய பிறகு, தலித்துகள், பழங்குடியினர், மற்ற ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் & பிரிவினர் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகமாக நடந்துகொண்டிருக்கின்றன.
மத்திய மாநில அரசுக்கள் சொல்வதற்கு நேரெதிராக, அடித்தட்டு மக்களின் உரிமைகளும் பொருளாதார உதவிகள் இதுவரை பறிக்கப்பட்டு கொண்டே வருகின்றன. சாதிய அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறை கூட காவி - பெருநிறுவன பயங்கரவாத ஆட்சியில் ஒழிக்கப்பட்டு விட்டது. சாதிய முறை தொழிலாளர்களின் சமூக அமைப்பு மூலம் உருவானது. எனவே, சாதி ஒழிப்புக்கான போராட்டமும் வர்க்க போராட்டத்தின் ஒரு பகுதி. சாதிய தோற்றத்திற்கான காரணமும் சாதிய ஒழிப்புக்கான வர்க்க போராட்டமும் (இந்த இரண்டும்) எப்போதும் இணைந்து பயணிக்க வேண்டும். சமூகம் பல மாற்றங்களை உள்வாங்கியது போல, சாதியும் பல்வேறு வடிவங்களை அதற்க்கு தகுந்தாற்போல் மாற்றிக்கொள்கிறது. சீர்திருத்த நடவடிக்கைகள் இப்போது இருக்கும் அரசியல் அமைப்பு முறையில் சாதியை ஒழிப்பதற்கு அல்லாமல், மாறாக குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளையும் வர்க்கங்களையும் ஒருங்கிணைத்து சுரண்டும் சமூக அமைப்பாக இருக்கிறது.
இந்த நிலையில் சாதியம் பற்றி ஆழமான கோட்பாட்டு முடிவுகளை நோக்கி இடதுசாரிகள் முன்னேற வேண்டிய அவசியம் இருக்கிறது. அனைத்திந்திய அளவில் நடைபெற்ற கருத்தரங்கின் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த கருத்தரங்கம்! ஒரு முக்கியமான மைல்கல்
அனைவரும் வருக! ஆதரவு தருக!!
நிகழ்ச்சி நிரல்
நாள்: 21-12-2024 சனிக்கிழமை மாலை 5.00 மணி
இடம்: டயட் இன் ஓட்டல் விடுதி, ஒட்டகபாளையம், சோமசுந்தர பாரதி நகர், வடபழநி, சென்னை-26 கமலா தியேட்டர் அருகில்
சிறப்புரை:
தோழர் மனசையா, பொலிட்பீரோ, சிபிஐ எம்.எல் ரெட் ஸ்டார்
(அண்ணல் அம்பேத்கர் & சாதி ஒழிப்பு பற்றி கம்யூனிஸ்ட்களின் அணுகுமுறை)
தோழர் சுப. மனோகரன், தமிழ்நாடு செயலாளர், சிபிஐ எம்.எல் ரெட் ஸ்டார்
(சாதிவாரி கணக்கெடுப்பு உடனடி அவசியம் என்ன?
தோழர் கார்க்கி வேலன், சென்னை மாவட்டச் செயலாளர், சிபிஐ எம்.எல் ரெட் ஸ்டார்
(பஞ்சமி நில மீட்பு இயக்கம் – அனுபவம்)
தோழர் இனியவன், மாநிலத் தலைவர், சாதி ஒழிப்பு இயக்கம்
(சாதி ஒழிப்பு தேவை என்ன?)
தலைமை : தோழர் கி.நடராசன், மாவட்டக் குழு சாதி ஒழிப்பு இயக்கம்
வரவேற்புரை : தோழர் தமிழ் முரசு, சென்னை மாவட்ட செயலாளர், சாதி ஒழிப்பு இயக்கம்
நன்றியுரை: தோழர் பாரதி, மாவட்ட பொருளாளர் , சாதி ஒழிப்பு இயக்கம்
- அனைத்திந்திய சாதி ஒழிப்பு இயக்கம் (CAM)
ALL INDIA CASTE ANNILATION MOVEMENT
தொடர்புக்கு : 94999 06387 - 98408 55078