அழுக்குத் தாயின் விரல் பிடித்து
வெள்ளந்தியாய் நடந்து வருவாள்
வேலைக்காரி பெற்றெடுத்த
அழுக்குப் பாவாடைக்காரி...
வாசலில் கிடக்கும்
காற்றடைத்த குட்டி விமானம்
சட்டென இளைத்து
அலமாரிக்குள் சுருண்டுகொள்ளும்...
பால்வெள்ளை இளவம்பஞ்சு மெத்தையில்
இல்லாத கிறுக்கல்கள் அவள் பெயரில்
மொய்யெழுதப்பட்டு தரையமர்த்தப்படுவாள்
அல்லது வாசலுக்கு விரட்டப்படுவாள்...
பெரியவர்களுக்கு தாயும்,
சிறியவர்களுக்கு மகளுமென
அவர்கள் வேலைக்காரிகளின்
வம்சத்தவர்களாவார்கள்...
- ராம்ப்ரசாத் சென்னை (