திருக்குறள் என்று உலகில் எங்கு எவர் சொன்னாலும் தமிழ்நாடு என இணைத்து நினைவுக்கு வரும்படிச் செய்ய வேண்டும்..
இலெனின் என்றவுடன் சோவியத்து உருசியாவும், மாவோ என்றவுடன் சீனாவும், சேக்சுபியர் என்றவுடன் இங்கிலாந்தும் நினைவுக்கு வருவது போல் திருக்குறள் என்றுவுடன் தமிழும் தமிழ்நாடு நினைவுக்கு வர வேண்டும்..
திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் எனப் பொதுப்பட முழங்குவது தவறு.. இன்றைக்குத் தேசியம் என்பது இந்தியா என்பதாகவே உணரப்பட்டிருக்கிறது..
இந்தியாவின் தேசிய நூலாகத் திருக்குறளைக் கொண்டு வர வேண்டும் எனக் கோரிக்கை வைப்பது சரியன்று..
இந்தியா ஏற்கனவே வேதங்களையும், புராணங்களையும் சாஸ்திரங்களையும் தலை மேல் தூக்கிக் கொண்டாடி வருகிறது..
அவற்றோடு திருக்குறளையும் தூக்கிக் கொண்டாட வேண்டும் என நாம் கேட்பது திருக்குறளை இழிவுபடுத்துவது..
திருக்குறளை இந்தியாவின் நூலாக ஏற்றால், ஆரிய வேத, புராண, சாஸ்திரக் குப்பைகளை இந்தியா தூக்கி வீச வேண்டும்..
இந்தியா என்பது பார்ப்பனிய பாசிசமாக இருக்கிற வரை அது, வேத புராண சாஸ்திரங்களை மறுக்காது..
எனவே தமிழ் ஆர்வலர்கள், திருக்குறள் ஆர்வலர்கள் திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் எனும் கோரிக்கையை விடுத்துத் திருக்குறளைத் தமிழ்நாட்டின் நூலாக்க வேண்டும் என்றே வலியுறுத்த வேண்டும்!
- தமிழ்நாடு ஆசிரியர் குழு