“சூத்திரன் வேதம் ஓதுவதைக் கேட்டால் காதில் ஈயத்தை ஊற்று., கேட்டதில் ஒரு வரியை ஞாபகத்தில் வைத்துவிட்டானென்றால் அவனது நாக்கை வெட்டு என்பன போன்ற கடுமையான வாசகங்கள் உள்ள புத்தகங்கள் உள்ளன. இது மிகவும் மட்டமான காட்டுமிராண்டித்தனம். சந்தேகமே இல்லை. இத்தகைய காரியங்களைச் செய்த பேய்கள் முன்காலங்களில் இருந்திருக்கின்றனர்.

“அதிகாரங்களைக் கெட்ட விஷயங்களில் பயன்படுத்தினால் தகுந்த கேடு விளைகிறது. அதிகாரங்களை நல்ல காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆயிரக்கணக்கான வருடங்களாக இந்திய ரிஷிகள் சேர்த்து வைத்தப் பொக்கிஷங்களை (கருத்துகள்), இவற்றுக்கு டிரஸ்டியாக நியமிக்கப்பட்ட பிராமணன், ஏனைய மக்களுக்கு பகுத்து வழங்காததால் தான் முஸ்லிம் படையெடுப்பு (வட) இந்தியாவில் வெற்றியடைந்தது. டிரஸ்டியாக நியமிக்கப்பட்ட பார்ப்பனன் கருவூலத்தைத் திறந்து பொக்கிஷத்தை (நல்ல கருத்துகள்) ஆரம்பத்தில் இருந்தே அனைத்து மக்களுக்கும் வழங்காததால் தான் இந்தியர்களுக்கு தங்கள் மதத்தின் மீது ஈடுபாடு ஏற்படவில்லை. எந்த மதத்தினரும் சிறிது படையுடன் இந்தியாவிற்குள் நுழைந்தாலும் அவர்களுக்கெல்லாம் நாம் 1000 வருடங்களாக அடிமைப்பட்டோம். ஏன் என்றால் நம்மிடம் ஒற்றுமை இருக்கவில்லை. வங்காளத்தில் ஒரு பழைய மூடநம்பிக்கை உள்ளது. நல்ல பாம்பு ஒருவனைக் கடித்து பின்னர் அந்த பாம்பே தனது விஷத்தைக் கடிப்பட்டவனிடமிருந்து திரும்ப உறிஞ்சி எடுத்துவிட்டால் அவன் பிழைத்துக்கொள்வான் என்பதே இந்த நம்பிக்கை. இதே போன்று பார்ப்பான் இந்து மதத்திற்குள் தான் செலுத்திய விஷத்தை திரும்ப எடுக்க வேண்டும்”

(திருச்சி மாவட்டம் ஷ்ரி ராமகிருஷ்ண தபோவனம் 1983இல் வெளியிட்ட The man making message of Vivekananda for the USE of College Students என்கிற புத்தகம் பக்கங்கள் 150, 151, 152, 155, 156)

பூணூலைப் பற்றி காந்தியார்!

நான் பெரியவன் ஆகிவிட்ட பிறகு இந்தியாவிலும், தென்னாப்பிரிக்காவிலும், பலர் எண்ணத்தின் பேரிலேயே நான் பூணூல் போட்டுக் கொள்ளும் படி செய்ய முயன்றார்கள். ஆனால் அவர்கள் முயற்சி வெற்றியடையவில்லை. சூத்திரர்கள் பூணூல் போட்டுக் கொள்ளக் கூடாது என்றால், மற்ற வருணத்தினருக்கு மாத்திரம் அதைப் போட்டுக் கொள்ளுவதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று விவாதித்தேன். பூணூல் கொள்ளுவது அனாவசியமான பழக்கம் என்பது என் கருத்து. ஆகையால் அதை அணிய வேண்டும் என்பதற்குப் போதுமான நியாயம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பூணூலைப் பொருத்தவரையில் எனக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை. ஆனால் அதை அணிய வேண்டும் என்பதற்குரிய நியாயம் தான் எனக்குத் தென்படவில்லை.

பூணுலைப் பற்றி இராமகிருஷ்ணர்! 

பூணூல் அணிவது பற்றி பரமஹம்சர் என்று மதவாதிகளால் போற்றப்படும் ராமகிருஷ்ணர் கூறிய கருத்து. “The Sacred thread is also bondage for it is a sign of egoism, I am a Brahmin and superior to all”(Shree Ramakrishna the great master” நூலின் 137வது பக்கம்)“பூணூல் என்பது அகங்காரச் சின்னம்; நான் எல்லோரையும் விட உயர்ந்த பிராமணன் என்பதன் சின்னம்”