கோயம்புத்தூர் ஜில்லா போர்டு பிரசிடெண்டு மீது சுமார் 30 மெம்பர்கள் சேர்ந்து "நிர்வாக ஊழல்"களைப் பற்றியும், போர்டுக்கு ஏற்பட்ட நஷ்டத்தைப் பற்றியும் ஒரு பிராது தயாரித்து கையொப்பமிட்டு சர்க்காருக்கு அனுப்பிய விஷயமும், மற்றும் பிரசிடெண்ட் கனம் வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர பட்டக்கார கனவான்கள் முதலியவர்கள் முயற்சித்துக் கொண்டிருந்த விஷயமும் நேயர்கள் அறிந்ததாகும்.periyar 465பிறகு உடனே கனம் பட்டக்காரர்களுக்கும், சில மெம்பர்களுக்கும், கனம் கவுண்டர் அவர்களுக்கும் ஒரு வித சமாதானம் ஏற்பட்டு விட்டதாகவும், அதன் பயனாய் அப்பிராதில் கையெழுத்து செய்திருந்த கனவான்களில் ஒரு சிலர் தங்கள் கையெழுத்துக்களை வித்ட்றா செய்து கொண்டதாகவும் தெரிய வருகிறதோடு சமாதானத்தில் ஒரு நிபந்தனை, கனம் கவுண்டர் அவர்கள் பிரசிடெண்டு ஸ்தானத்தை ராஜீனாமா செய்து விடுவதாகப் பெரிய இடத்தில் ஒப்புக் கொண்டிருப்பதாயும் சொல்லிக் கொள்ளப்படுகிறது.

இதன் உண்மை எப்படி இருந்தாலும் அதைப்பற்றி பொது ஜனங்களுக்கு அக்கரை இருக்காது. ஸ்தல ஸ்தாபன நிர்வாகங்களில் கண்ட்றாக்ட்டு வேலைகளும், சிப்பந்திகள் நியமிக்கும் வேலைகளும் பிரசிடெண்டுகளுக்கும் சேர்மென்களுக்கும் இருப்பதினாலேயே போர்டுகளிலும், கவுன்சில்களிலும் தகரார்கள் ஏற்படுவதற்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் வருவதற்கும் பெரிதும் அவசியம் ஏற்பட்டு விடுகின்றன. இதைப் பற்றி நாம் பல தடவைகளில் எழுதி வந்த பிரகாரம் போர்டுகளின் தலைவர்களிடமிருந்து அந்த அதிகாரங்களைப் பறித்து விட்டால் பிறகு சேர்மென்களும், பிரசிடெண்டுகளும், கவுன்சிலர்களுக்கும் மெம்பர்களுக்கும் யோக்கியர்களாகவும், சினேகிதர்களாகவும் ஆகிவிடுவார்கள். தகராருக்கும் சிறிதும் இடம் இருக்காது.

ஒரு சமயம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வருவதாய் இருந்தாலும் கமிஷனர்கள் மீதுதான் வரக்கூடுமே ஒழிய வேறில்லை. அதனால் கமிஷனர்களுக்கும் நஷ்டம் இருக்காது. அவர்கள் வேறு ஊருக்கு மாற்றப்பட்டு விடலாம். மெம்பர்களுக்கும் அவசியமான காரியங்கள் கவனிக்க சௌகரியமேற்படும். ஆகவே முதல் மந்திரியார் சீக்கிரம் கவனிப்பாரா?

(பகுத்தறிவு துணைத் தலையங்கம் 28.10.1934)

Pin It