குற்றம் புரிந்தவன்
என அடையாளம்
காட்டப்பட்டு கூண்டிற்குள்
நிறுத்தப்பட்டதில்
சாட்சிக் காரர்களிடம்
நட்புப் பாராட்டினேன்.

குற்றம் புரிந்ததற்கான
ஆதாரங்களைத் திரட்ட‌
எதிரிகளை அனுப்பி
அவர்கள் தலைவனாக‌
நண்பனை நியமித்தேன்.

இருமடங்கு ஊதியம்
பெற்றதில் வாயடைத்துப்
போன எதிர் தரப்பு வக்கீல்
மறுமொழி பேசவில்லை.

நீதிபதியைப் பார்த்து
புன்னகைத்தேன்-
நிரபராதியென
தீர்ப்பு எழுதி நகர்ந்தார்.

உற்றுப் பார்த்தேன்
நீதி தேவதையின் கண்கள்
கருப்புத் துணியில்
கட்டப்பட்டிருந்தது.
காந்தி புன்னகைத்திருந்தார்.

- சோமா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It