தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது.
தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி பெற்ற மாநிலமாக வளர்ந்து வருகிறது.
தமிழ்நாட்டில் வேல் எடுத்தும், காவடி தூக்கியும், திருப்பரங்குன்றத் தெருக்களில் உருண்டாலும், பிரண்டாலும் அமைதியைக் குலைத்துவிட முடியாது.
தமிழ்நாடு, இந்துவானாலும், கிருத்துவமானாலும், இஸ்லாம் என்றாலும் சமூக சமத்துவத்தைப் பேணுகிறது.
எந்த மதத்தவரானாலும் தந்தை பெரியாரின் சீர்திருத்த, சமத்துவக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் வாழும் நாடு, தமிழ்நாடு.
இதனால் வயிறு பொருமிப்போய் இந்தக் காவிக் கூட்டங்களும், அதன் எடுபிடிகளும் மூச்சுத் திணறி, முக்கித் தவிக்கின்றன.
கொள்கை அடிப்படையில் எதிர்க்க முடியாமல் பொய் சொல்கிறார்கள், பித்தலாட்டம் செய்கிறார்கள், கலவரங்களை உருவாக்க முயல்கிறார்கள்.
ஆங்காங்கு நடைபெறும் சமூகக் குற்றங்களுக்குக் காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து வந்தாலும்கூட, எதிர்க்கட்சி என்று சொல்லிக் கொண்டு அதையே பேசிப் பேசி மக்களின் கேலிக்கு ஆளாகிறார்கள்.
இது பெரியார் நாடு. நடப்பது திராவிட மாடல் ஆட்சி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பதே காவிகளைக் கதிகலங்கச் செய்து கொண்டு இருக்கிறது!
ஏன் தெரியுமா? முதல்வரின் கைகளில் இருப்பது 'பெரியாரின் கைத்தடி!'
- கருஞ்சட்டைத் தமிழர்