புதுக்கோட்டை, பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருந்து அந்தந்த மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விநாயகர் சதுர்த்தி விழாவை மகிழ்ச்சியுடன், உறுதி மொழியுடன் கொண்டாட வேண்டுமென்று சுற்றிக்கைகள் அனுப்பப் பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தி என்றால், விநாயகர் பிறந்தநாள் என்று பொருள். அது 7ஆம் தேதி என்றால், பிறந்த மாதம்-வருடம் ஏன் சொல்லப் படவில்லை.
சங்க இலக்கியங்களில் விநாயகர் என்ற பெயரே இல்லை. முருகனின் அண்ணன் விநாயகன் என்றால் அந்த வரலாறு ஏன் 'திருமுருகாற்றுப்படை' யில் காணப்படவில்லை.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மதம் தொடர்பான விழாக்கள் கொண்டாடப் படுவது இல்லை.
விநாயகரை மத அரசியலாக்கினார் திலகர். அதன் தொடர்ச்சி கலவரமாக, வன்முறையாக மாற வழிவகுக்கப் பட்டு விட்டது.
இதன் வேர் ஆர்எஸ்எஸ் இல் இருக்கிறது. ஒன்றிய அரசு, அரசுப் பணியாளர்கள் ஆர்எஸ்எஸ் இல் உறுப்பினர் ஆகலாம் என்று சொல்லியது. எதிர்ப்பின் காரணமாக அதைத் திரும்பப் பெற்றது. இதே திட்டத்தை இன்று ராஜஸ்தான் அரசு ஏற்றுக்கொண்டு உள்ளது.
கடந்த ஆட்சிகளின் போது தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் ஆர்எஸ்எஸ் காரர்கள் நுழைக்கப் பட்டுள்ளனர் என்ற விமர்சனம் இங்கு மேலோங்கி இருந்தன என்பதும் கருதத் தக்கது.
சுற்றறிக்கை அனுப்பிய இரு மாவட்டக் கல்வி முதன்மை அலுவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திராவிட மாடல் ஆட்சியில் மதத்திற்கு இடம் வேண்டாம்.
விநாயகர் சதுர்த்தியும் மதத்தின் ஒரு கூறுதான்.
- கருஞ்சட்டைத் தமிழர்