மொழி என்பது மனிதர்கள் தங்களது எண்ணங்கள், கருத்துக்கள், உணர்வுகள் போன்றவற்றை வெளியிட உதவும் ஒரு கருவியாகும். மக்களை மாக்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது மொழியாகும். மொழி மனித சமூகத்தின் அடையாளமாகும். ஒரு மொழியைப் பேசுகின்ற மக்களின் சமூகம், பண்பாடு, நாகரிகம், பழக்க வழக்கங்கள் போன்றவற்றைப் பிரதிபலிப்பது சமூகவியலின் இயற்கையாகிய மொழி என்றால், கலை அறிவியல் போன்றவற்றைப் பிரதிபலிப்பது இலக்கியங்களின் மொழி எனலாம். அம்மொழியை கற்றல் தொழில்நுட்பக் கருவிகளின் உதவியுடன் உலகளாவிய நிலைக்கு உட்படுத்துவது கணினி மொழியாகும். சமகாலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களாகும்.ஒரு மொழி பேசுகின்ற மக்களின் அகவாழ்வைப் பிரதிபலிப்பது கலை இலக்கியங்கள். புறவாழ்வைப் பிரதிபலிப்பது அறிவியல் இலக்கியங்கள். ஒரு மொழியில் உள்ள இலக்கியங்கள் அம்மொழியைப் பேசுகின்ற மானிட சமுதாயத்தின் பண்பாட்டு மரபுகள், பழக்க வழக்கங்கள், உறவு முறைகள், நடத்தை இயல் கோட்பாடுகள், சமூக உளவியல் வெளிப்பாடுகள், கருத்தியல் கட்டமைப்புகள் ஆகியவற்றை சமூகத்தேவை சார்ந்த விளைவுகளாகத் தகவமைப்பது கல்வியின் நடைமுறையாகத் திகழ வேண்டும். அதன் வாயிலாக மொழியைக் கற்கின்ற மாணவர்கள் தம் முன்னோர்களை மதித்தல், மனித மாண்புகளைப் போற்றுதல், பெற்றோருக்கு கீழ் படிதல், சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படுதல், சமூக மேன்மைக்கு கலங்கம் இல்லாத உழைப்பில் ஈடுபடுதல் போன்ற உயரிய ஒழுக்கங்களைப் பெறுவதாக அமைய வேண்டும்.
ஒரு மொழியின் வீச்சு என்பது கற்றல் கற்பித்தல் நடைமுறைகளில் பரந்துபட்ட உலக இலக்கியங்களோடு வினையாற்றும்படியாக அமையும்போதுதான் கல்வியின் நோக்கம் முழுமை பெறுகின்றது.
மனித மொழியானது சமூகவியலின் அடிப்படையிலான இயற்கையான மொழியாகும். மொழியினை கற்க முற்படும் அறிவியலுக்கு பொதுத்தன்மை அடிப்படையில் மொழியியல் என்றும், தனித்தன்மை அடிப்படையில் இலக்கணம் என்றும், வாழ்வியல் அடிப்படையில் இலக்கியம் என்றும் பெயர் பெறுகின்றது. மொழியின் வெளிப்பாடாக பேச்சும் எழுத்தும் அமைகிறது. மனித உரையாடலாகவும் உறவாடலாகவும் புரிதல் மற்றும் விளக்கம் என்னும் இயக்க நிலைகளை மொழி பெற்றுள்ளது.
மொழி என்பது மூன்று பரிமாண விளக்கங்களை கொண்டுள்ளது.
1. கருத்தியல் கருவி
2. பண்பாட்டு ஊடகம்
3. முழுதளாகிய சமூகப் பிரதிபலிப்பு
மொழி கற்பித்தல் முறைகளும் உத்திகளும் தொழில்நுட்பத் துறைகளும் மிகப் பரந்த அளவில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளன. இவற்றின் பின்னணியில் மொழியின் முப்பரிமாண சிந்தனைகளும் அவற்றின் பங்களிப்பும் பெருமளவில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
மொழி கற்பித்தல் என்பது மொழியை கற்பிக்கும் கோட்பாடுகள் மற்றும் நுட்பங்களுடன் தொடர்புடைய ஒரு துறையாகும். இது ஒருவகை கற்பித்தல் முறையாக கருதப்படுகிறது. இம்முறை ஆசிரியர் தமது கற்றல் செயல்பாடுகளில் இருந்து பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு உண்மையான கற்பித்தல் முறையாக அமைகிறது.
மொழிப் பயிற்சி
மொழிப் பயிற்சி அணுகுமுறை என்பது கற்றல் கற்பித்தல் அமைப்பு முறையில் பயிற்சி கருவிகளை உள்ளடக்கிய ஒரு முறையாக அமைகிறது. இம்முறை கற்பிப்பவர்-கற்பவருக்கு இடையிலான கற்றல் திறனை மேம்படுத்த உதவுகிறது.
தாய்மொழி வழி கல்வி
ஒருவர் தம் சிந்திப்பனவற்றை சிந்தித்தவாறு சொல்ல உதவுவதே தாய் மொழியாகும். ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய் மொழியே சிந்தனை மொழியாகும். தாய்மொழி வழி கற்கும் போது தான் கற்றலின் நோக்கம் முழுமை பெறுகிறது. பிறமொழி வழியாக கற்கும் போது மனப்பாடம் செய்யும் முறையே நிகழ்கிறது. மாறாக அங்கு கற்றல் முழுமை பெறுவதில்லை. அத்தகைய பிறமொழி வழி கற்றலானது மாணவர்கள் மீதான அறிவு வன்முறையாகவே அமைகிறது.
உலகின் தலைசிறந்த சிந்தனை இயல் அறிஞர்கள் அவரவர் தாய்மொழி வழி கல்வி பயின்றவர்களே. படைப்பாளிகள் என்று சொல்லப்படுவோர் படைத்தவை எல்லாம் தாய்மொழி கல்வி தந்த அனுபவங்கள் தான்.
மேலைநாட்டு கல்வி முறை
நார்வே நாட்டில் பள்ளிக்கூட மேல்நிலை வகுப்புகளின் அறிவியல் துறை சார்ந்த பாடங்கள் அனைத்தும் சர்வதேச மொழிகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து தேர்வு எழுதும் முறையாக உள்ளது. விருப்ப மொழிகளை தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் அடிப்படை மொழி வழிக்கல்வியாக தாய்மொழி வழிக் கல்வியையே பின்பற்றப்படுகிறது.
ஸ்வீடன் நாட்டில் பிறந்து வளரும் பிற மொழி சார்ந்த குழந்தைகள் அவரவர் தாய்மொழியிலேயே பேசவும் கற்கவும் தொடர்ந்து தாய் மொழி வழியாக அறிவினை பெற்ற சிறக்கவும் சீடன் நாட்டு கல்வித்துறை செயலாற்றுகிறது. குழந்தைகள் தங்கள் வீட்டில் பேசும் மொழியிலேயே மழலையர் கல்வி அமையவும் பயின்று வைக்கவும் ஊக்குவிக்கவும் ஸ்வீடன் அரசு திட்டம் மேற்கொண்டுள்ளது. பின்லாந்து தொடர்ந்து கல்வி திறனில் முன்னாந்தாக முதலிடம் பெறுவதற்கு தாய்மொழி வழிக் கல்வியே அடித்தளமாக இருக்கிறது
ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலும் தன்னாட்டில் வளரும் பிற மொழியினரின் குழந்தைகளுக்கு அவரவர் தாய்மொழி கல்வியை வழங்கி வருகின்றன. பிரான்ஸ், ஜெர்மனி ரஷ்யா தைவான் ஜப்பான் சீனா கொரியா அனைத்து நாடுகளிலும் பள்ளி கல்வி முதல் கல்லூரி கல்வி முனைவர் பட்டப்படிப்பு வரை அவரவர் தாய் மொழியிலேயே கற்கும் கொள்கை பின்பற்றப்படுகிறது. இந்த நாடுகள் உலகில் முன்னேறிய நாடுகளாக இருப்பதற்கு காரணம் அவர்களது தாய்மொழி வழி கல்வி முறையே ஆகும். (பஞ்சாடி. தாய்மொழி கல்வி. விஜய் அசோகன். 31 ஜனவரி 2020.)
.மொழியின் முக்கிய கூறுகள்:
1. ஒலி: மொழியின் ஒலியமைப்பு
2. சொல்: மொழியின் சொற்கள் மற்றும் அவற்றின் பொருள்
3. வாக்கியம்: மொழியின் வாக்கிய அமைப்பு
4. பொருள்: மொழியின் பொருள் மற்றும் கருத்து
மொழியின் வகைகள்:
1. இயற்கை மொழி: மனிதர்களால் பேசப்படும் மொழி
2. கலைச்சொல் மொழி: கலை, இலக்கியம் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் மொழி
3. கணினி மொழி: கணினிகளால் புரிந்து கொள்ளப்படும் மொழி
மொழியின் முக்கியத்துவம்:
1.தகவல் பரிமாற்றம் மொழி மனிதர்களுக்கு இடையே தகவல் பரிமாற்றத்தை எளிதாக்குகிறது.
2.பண்பாடு மொழி ஒரு பண்பாட்டை பிரதிபலிக்கிறது மற்றும் பாதுகாக்கிறது.
3. கற்றல் கற்பித்தல் என்பது ஒரு கல்வி செயல்முறையாகும் என்பது மட்டுமல்ல. மாறாக, ஒரு சமூகத்தில் அறிவு மட்டத்தை உயர்த்தும் செயல்முறையாகவும் இருக்கிறது. இது மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிறைவுரை
நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப காலத்தில் கல்வி செயல்பாட்டின் கருத்தியல்களை மாணவர்களிடம் சேர்க்க மொழி ஓர் தடை இல்லை என்ற வரலாற்றுக் கட்டத்தை அடைந்து விட்டோம். ஏ ஐ என்று வழங்கப்படும் செயற்கை தொழில்நுட்ப மொழிமாற்று நுட்பங்கள் கல்விச் சூழலில் வரங்களாகவும் அமைந்துள்ளன. இன்றைய கற்றல் கற்பித்தல் அணுகு முறையில் தேவை எல்லாம் மாணவர்களின் சிந்தனை திறனுக்கு அடிப்படையாக திகழும் தாய்மொழி வழி கல்வியை குழந்தைகளின் மகிழ்ச்சியான கல்வி முறையாக மீட்டெடுப்பதும் நவீன கல்வி சூழலுக்கு ஏற்றபடி தகவமைப்பதுமே ஆகும்.
துணை செய்தவை
- எஸ் எஸ் எம் சிவா ஐயா: கல்வி ஆராய்ச்சியின் அடிப்படைகள் முனைவர் பா ஜெயஸ்ரீ ராணி சம்யுக்தா பதிப்பகம் சேலம்
- முற்போக்கு கல்வி உளவியல் முனைவர் P. செல்வம் சம்யுக்தா பதிப்பகம் சேலம்
- இந்தியக் கல்வியியல் வரலாறு மற்றும் அரசியல் பொருளாதாரம் நிலை V. சித்ரா சம்யுக்தா பதிப்பகம் சேலம்
- இலக்கிய அறிவியல். புதியவன்.https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5444:2019-10-24-12-39-00&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82
- தமிழுக்குப் பேர் அழகா? அறிவா? - https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/47311-2024-10-17-06-41-56
- கற்றல் கற்பித்தல் நடைமுறையில் காலத்தின் திசைவழி எது? https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/47418-2024-11-10-15-10-19
- கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை. மக்கள் திரை.https://www.youtube.com/watch?v=bwJTVYd9MKE&pp=ygUf4K6u4K6V4K-N4K6V4K6z4K-NIOCupOCuv-CusOCviA%3D%3D
- காலந்தோறும் தமிழ் - ஆழி செந்தில்நாதன். https://www.youtube.com/watch?v=XJlO6acuPJc&pp=ygVj4K6G4K604K6_IOCumuCvhuCuqOCvjeCupOCuv-CusuCvjeCuqOCuvuCupOCuqeCvjSDgrpXgrr7grrLgrqjgr43grqTgr4vgrrHgr4Hgrq7gr40g4K6k4K6u4K6_4K604K-N
- மாணவர்களது அவையின் முரண்பாடுகளும் கவனிப்பாரது பொறுப்புணர்வும். புதியவன். செப்.2012. காக்கைச் சிறகினிலே.
- ஆ.பழனிச்சாமி, உதவிப் பேராசிரியர், SSM கலை மற்றும் அறிவியல்கல்லூரி, திண்டுக்கல்.