கீற்றில் தேட...


அறை முழுவதும்
விளையாடித் திரிந்த ஒளி
மெல்ல சோர்வடைந்தது...

நிழல்கள் கிடைத்தவற்றையெல்லாம்
விழுங்கி பருத்துப்போய்விட்டன...

போர்வைக்குள் இழுத்துப்போட்ட‌
நிழல்களின் தேவதையை நான்
கட்டியணைத்து புரண்டுகொண்டிருந்தது
அந்த நிழல்களுக்குத் தெரியவில்லை...

அவைகள் எப்போதும்போல்
அறை முழுவதும்
தங்களின் தேவதையைத்
தேடிக்கொண்டிருந்தன...


 - ராம்ப்ரசாத் சென்னை(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)