மேகம் சூழ்ந்த பொழுதில்
வானத்தில்
தொங்கு பாலம்
*
நாம் மட்டுமே இருப்பது
நல்லதல்ல
நீயும் நானும்கூட வேண்டும்
*
உளி தவற விட்ட
திருஷ்டிப் பொட்டு
காகம் கொத்தி சரி செய்கிறது
*
ஏணிக்கு
காத்திருக்கும் நேரத்தில்
வானத்தில் தாவி பார்
*
சக மனிதனை
மறுக்கும் மனதில்
இறை வாசம் எப்படி
*
காட்டாறு பருவம் கொண்டு
தோகை விட
கானக தடபுடல்
*
கவிதைகள் தொப்பை போடத்
தொடங்கி விட்டன
வாக்கிங் அனுப்பு
*
பூனையும் வீணை தான்
நாக்கால் தனை
சுத்தம் செய்கையில் கவனி
*
பிரார்த்தனையில்
பிச்சை எடுக்காதே
பேரன்பு பகிர்
*
மழைக்குப் பிறகு பார்க்கிறேன்
குளித்து சிங்காரித்த
மாமரம்
- கவிஜி