1.
ஊதுகுழல் ஓசை
கேட்பதில்லை
அடுப்பங்கரையில்
வாசலில் கரையும் காகம்
வந்து போகும்
அம்மாவின் நினைவுகள்.
2.
பாதுகாப்புக் கவசத்தில்
தொட்டிலில் தூங்கும் குழந்தை
அம்மாவின் பழைய புடவை.
3.
அம்மா இருக்கும் வரை
எந்த இழப்பும்
கடந்து போனது
காலத்தால்
அம்மா இறந்த மறுகணமே
தலைகீழாய்ப் போகுது
வாழ்க்கை.
4.
குடியிருந்த கோயிலில்
நேரில் தெய்வம்
காட்சி தரவில்லை
நிழற்படமாய் அம்மா.
........
5.
மழை வரும் போது
குடை தேடுவதைப் போல
வலி வரும் வேளையில்
வந்து செல்லும்
அம்மாவின் நினைவு.
- மு.பிரபு, வேலூர்