விரல் நுனி நீள்கையில்
வீறிட்டு திறக்கிறது
வெளியின் கதவு
*
தீர்க்க சுவர்
தீட்டிய கனவுக்குள்
புறா வந்தமரும்
*
கடவுச் சொல்லுக்குள்
கரை புரண்டோடும்
ஞாபக ஆடை
*
சூடும் நிலவுக்குள்
நீளும் குழலிசை
வீதி குறுக்கு நெடுக்கு
*
கைக்குட்டைக்குள் பொதியும்
மாயத் தும்மலுக்கு
நீயே ஸ்தம்பித்தல்
*
பாதி பழுப்பு பாதி பச்சை
இலை மேடையில்
ஒளிக்கூத்து
*
ஜன்னல் புகும் வெளிச்சம்
பருவம் வந்திருக்கிறதோ
தூசியில் இத்தனை பருக்கள்
*
இனி செய்யும் நிழலை
நின் வெயில் கொள்ளுதல்
எவர்க்கும் கவிதை
*
பின் மதியத்தில்
ஒரு மயானம் இருக்கிறது
வீதி நாய் கண்களைக் கவனி
*
நுனி நாக்கில் தொடங்கி
முனி நாக்கில் முடியும்
எனதன்பும் கோபமும்
- கவிஜி