கீற்றில் தேட...

மழைக்காற்றின்
பின்னிரவுக்கு முன்பாக
காதல் திரவியங்கள் வாசம் தீட்டப்படுகின்றன
ஜன்னலின் விழி வழியோரம்!
 
சாரலென இதமாய்
மிதமாய் தூறும்வண்ணம்
மழலையின் முதல் முத்தம் 
எச்சில் படர்ந்திருந்தது!
 
பதனிடப்பட்ட நாணங்கள்
துயிலெழும் தூரத்தில்
சலனங்கள் அர்த்தப்பட்டிருக்கக்கூடும்!
 
எதிர்பட்ட
கூச்சல்கள் மௌனித்துவிட
அங்குமிங்குமாய்
திட்டுத்திட்டாய் சில கூச்சக்கோடுகள்!
 
முன்னிரவுக்குப் பிறகான மிச்சத்தில்
முன்மொழிதல் அவளெனவும்
வழிமொழிதல் நானெனவும்
 
பின்னிரவுக்குப் பிறகான வெட்கத்தில்
தொடர மறுக்கும்
என் பேனா முனை!
 
- ரசிகன், பாண்டிச்சேரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)