நேற்று வரை
கிளறிக்கொண்டிருந்த
குப்பை மேட்டில்
புதிதாய்
எழும்பி விட்டது
கட்டிடம்
வெளியிலிருந்து
கொண்டு வந்த
வெள்ளைக்கோழிகளுக்கான
பண்ணைக்கென
சுற்றளவில்
சுருங்கி விட்டது
எங்களுக்கான
உணவு தேடும்
எல்லை
முன்னைப்போல்
எங்களிடம்
அன்பு காட்டுவதில்லை
முட்டை விலை
பற்றியே
முழு நேரமும்
சிந்திப்பவர்கள்
விரட்டப்படுவதும்
துரத்தப்படுவதும்
விதியாகிப்
போனது
சிதறிய தீனிகளை
பொறுக்கும் நிலையை
சிறகுகள் சிலிர்த்து
எதிர்த்துக் கேட்டால்
பார்க்கிறார்கள்
தீவிரவாதியைப்போல்
- க.ஆனந்த் (