கீற்றில் தேட...

man_330சிறகுகளை

ஒவ்வொன்றாய் பிய்த்து போட்டபடி

அந்த கானக வெளியினைக் கடந்தேன்

என்னைத் தேடி வரும் அவனுக்கு

நான் காணாமல் போவதையும்

அடையாளப்படுத்தி..

 

நெடுநாட்களாகியும்

யாரும் தேடி வராத நிலையில்

காய்ந்த குருதிதுளிகள்

தக்கைகளாயும்

சிறகுகள் இடமாறியும்

போயிருந்தனவென்று

எனக்கு பின்னால் வந்த

பருந்தொன்று

சொல்லிச் சென்றது..

 

சிதைந்த என் அடையாளங்களைத் தேடி

மீண்டும் வந்த வழி திரும்பினேன்..

சிறகுகளேதும் காணப்படாத நிலையில்

துயருற்று முள் மரத்தின் அடியில்

மருகி நிற்கையில்

அதன் கிளையொன்றில்

என் அத்தனை இறகுகளும்

சேகரிக்கப்பட்டிருந்தது

அருகிலேயே பாதுகாப்பாய்

அவனும்..

 

- இசை பிரியா  (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)