குடி அரசு பத்திரிகை துவக்கப்பட்டு இன்றைக்கு 11வது வருஷம் நடக்கின்றது. மத்தியில் ஒரு வருஷ காலம் அது அஞ்ஞாத வாசம் செய்ய வேண்டி ஏற்பட்டு அதன் கொள்கைகள் "புரட்சி", "பகுத்தறிவு" என்னும் பெயரால் வெளியிடப்பட்டு வந்து இப்போது மறுபடியும் 1935வது வருஷம் ஜனவரி முதல் பழயபடி குடி அரசு என்னும் பெயராலேயே அது வெளியாக்கப்பட்டு முன் நிறுத்தப்பட்டதிலிருந்தே தொடர்ந்து 9ம் மாலை 23வது மலராய் வெளி வருகிறது. ஆதியில் "குடி அரசு" மனித சமூகத்துக்கு என்ன தொண்டு செய்ய முன் வந்ததோ, அதே தொண்டை எப்படிப்பட்ட கஷ்டமான காலத்திலும், நெருக்கடியான காலத்திலும் பின்னடையாமல் செய்து வந்திருப்பதோடு இப்போதும் அதையே கடைப் பிடித்து தன்னாலான தொண்டாற்ற துணிவுடன் முன் வந்திருக்கிறது.
(குடி அரசு அறிவிப்பு 13.01.1935)
***
"பகுத்தறிவு"
"பகுத்தறிவு" என்னும் பெயரால் மாத வெளியீடு ஒன்று வெளிப்படுத்த உத்தேசித்து உள்ளோம். இந்த உத்தேசமானது சுமார் 4, 5 வருஷத்துக்கு முன்னாலேயே செய்யப்பட்டதானது குடிஅரசு வாசகர் களுக்குத் தெரியும். அதைப்பற்றிய விபரம் சீக்கிரத்தில் தெரிவித்துக் கொள்ளுவோம்.
(குடி அரசு அறிவிப்பு 13.01.1935)
***
தெரிவிப்பு - எழுத்து வடிவங்கள் திருத்தம்
ஆகிய எழுத்துக்களை முறையே
ணா. றா. னா. ணை. லை. ளை. னை. என்பதாகத் திருத்தி அச்சுக் கோர்த்திருக்கிறோம்.
(பர்)
(குடி அரசு அறிவிப்பு 13.01.1935)